அவன் அவளிடம் பேசி ரொம்பக்காலம் ஆகி விட்டது. ஆமாம், முகம் கொடுத்து பேசி சுமார் ஐந்து வருடமாவது இருக்கும், சும்மா "வாங்க..." என்றும் "எப்பிடி இருக்க..." என்ற கேள்விக்கு "நல்லா இருக்கேன்..." என்று Formality ஆக பேசியே இரண்டு வருடம் இருக்கும். சின்ன வயதில் மிக நெருக்கமாக பழகிய தன் தோழி இப்பொழுது தன்னை பார்த்தால் சற்று புன்னகை செய்ய மூன்று முறை யோசனை செய்கிற நிலைமை, இது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று நான் இப்பொழுது சொல்லி எந்த பயனும் இல்லை, நான் அதை சொல்ல போவதும் இல்லை. தவறு அவன் பேரிலும் இல்லை அவள் பேரிலும் இல்லை என்பது மட்டும் உண்மை.
இப்படி இருந்த நிலையில் ஒரு நாள் அவனுக்குள் ஒரு எண்ணம் முளைத்தது. அப்படி திடீர் என்று முளைத்த எண்ணம் ஒன்றும் இல்லை, பல நாட்க்களாக வளர்ந்து வந்த எண்ணம் அன்று முழு வளர்ச்சி அடைந்தது என்பதே உண்மை. அது என்னவென்றால் இப்பொழுது அவளை தொலைபேசியில் (கைபேசியில்) அழைத்து பேசினால் என்ன என்பது தான். இருந்தாலும் அவனுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. இத்தனை காலம் கழித்து அழைத்துப்பேசினால், அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள்.... தன் பெற்றோரிடம் 'போட்டு கொடுத்து' விடுவாளோ.... அப்படி செய்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்.... அவனது ego வும் அவனை தடுத்து. "இத்தனை காலமாக உன்னை மதியாத அவளை நீ ஏன் அழைத்து பேசணும்.... அது உன் ஆண்மைக்கு இழுக்கு அல்லவா....????" என்று அது கேவலமாக கேள்வி கேட்டது.
அன்று ஞாயற்றுக்கிழமை. அப்படி அவளை அழைக்க வேண்டும் என்றாலும், அவள் கைபேசி எண் தெரியாது. அதை எப்படி தெரிந்து கொள்ள.... யாரிடம் கேட்டால் "மீசையில் படாமல் கூழ் குடிக்கலாம்....".... ? இப்படி ஆயிரம் கேள்விகளுக்குள் மாட்டிக்கொண்டு அவளிடம் பேசவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான். இப்படி யோசித்துக்கொண்டே அவன் அவன் படுக்கையில் அமர்ந்தான்.
ஒரு முடிவெடுத்தால், அதை மீறுவதென்பது நமக்கு தான் ஹல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே.... அதேப்போல் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவள் கைபேசி எண்ணை கண்டு பிடித்தே விட்டான்.
எண் கிடைத்துவிட்டாலும் எப்படி பேச, என்ன பேச.... இப்படியெல்லாம் பல தயக்கங்களால் உடனே அவளிடம் உடனே பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தயக்கங்களை தள்ளி வைத்து ஒரு வழியாக அன்றே அவளிடம் பேச ஆயத்தமானான். கைபேசியில் Save செய்து வைத்திருந்த அவள் எண்ணை அழுத்தினான்.... "தக் தக்...தக் தக் தக்..." இது அவன் இதயத்துடிப்பு.... அவள் ஏனோ கைபேசியை எடுக்கவேயில்லை.... சரி போகட்டும், இதோடு அவளோடு பேசுவதற்கான தன் முயற்சியை கைவிட்டுவிட முடிவெடுத்தான். இது மீறுவதற்கான முடிவல்ல, உறுதியான முடிவு.
ஆனால் அவன் சற்றுமே எதிர்பாராத ஒரு திருப்பம் சில நிமிடங்களில் ஏற்ப்பட்டது. அவனுக்கு ஒரு SMS வந்தது "Who are you ? Do I know you ?". ஆம் அது அவளிடம் இருந்தே தான். அவன் முகத்தில் மலர்ந்த அந்த ஆனந்தம் அவனுடன் இருந்த அவன் நண்பர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. "டேய் ஆனந்த்.... திடீர்ன்னு என்னடா இவ்வளவு ஆனந்தம்.... என்ன விசேஷம்.... " என்று கேட்டனர். அவன் கதை முழுவதையும் சுருக்கமாக சொன்னான், சொல்லிவிட்டு அவளுக்கு பதில் SMS அனுப்ப போவதாக சொன்னான். அவர்கள் அவன் மண்டையில் ஒரு குட்டு கொடுத்துவிட்டு, அவளை Call பண்ண சொன்னார்கள். ஆனால் அவன் அவர்கள் பேச்சை தட்டியிருக்கலாம். தட்டியிருந்தால் அவன் அந்த பேரதிர்ச்சிக்கு ஆளாயிருக்கமாட்டான்.
அவன் அவள் கைபேசிக்கு அழைத்தான், அவளும் எடுத்தாள், இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் பேசினால் "ஹலோ, நான் சந்தியா பேசுறேன், நீங்க யாரு பேசுறீங்க...". இவன் தொடர்ந்தான் "ஹ.. ஹல.. ஹலோ.. நா.. நான் தான் ஆ.. ஆனந்த் பேசுறேன்..." "ஹ்ம்ம்...சொல்லுங்க" அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவளிடமிருந்து சற்றுமே ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. அது அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு பேச்சை தொடர்ந்தான். "நல்லா இருக்கியா....பேசி எத்தன காலம் ஆயிட்டு...." "ஹ்ம்ம்.... நான் நல்லா இருக்கேன்.... நீங்க நல்லா இருக்கீங்களா...." "நான் நல்லா தான் இருக்கேன்.... நீ இப்ப எங்க இருக்க.... என்ன பண்ணற.... " "கோயம்புத்தூர் இன்ஜினியரிங் காலேஜுல படிக்குறேன்.... Second year.... " "அப்படியா.... கொயம்புத்தூர்லயா.... சரி சரி.... நல்ல படிக்குரியா.... " "ஹ்ம்ம்.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க.... " "நான் பாம்பேல இருக்கேன்...." அவன் தொடர்ந்தான் "நீ கோயம்புத்தூருல இருக்க.... எத்தன நாளுக்கு ஒருக்கா ஊருக்கு போயிட்டு வருவ...." "ஹ்ம்ம்.... மாசத்துக்கு ஒரு தடவ போவேன்.... Second Saturday வரப்ப போவேன்.... "
இப்படியே சில நிமடங்கள் கடந்தன. ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் "ஹ்ம்ம்..." என்று சொல்லுவது, ஒரு ஈடுபாடு இல்லாமல் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்து வந்தது அவனுக்கு கொஞ்சம் சங்கடமாகே இருந்தது. இவனும் பொறுத்து பார்த்தான், பொறுமை கேட்டவுடன் ஒரு கேள்வி கேட்டான்.... "நான் உங்கிட்ட பேசுறது Disturbtion ஆ இருக்கா.... இருந்துதுன்னா சொல்லு.... நான் பிறகு எப்பவாவுது கூப்பிடுறேன்...." அவன் இதற்க்கு எதிர்பார்த்த பதில் "இல்ல அப்பிடியெல்லாம் இல்ல.... நீங்க சொல்லுங்க.... " ஆனால் அவள் கூறிய பதில் "ஹ்ம்ம்.... நாளைக்கு Internals இருக்கு படிச்சிட்டு இருந்தேன்.... ரொம்ப tough subject.... ஒண்ணுமே படிக்கல.... அதான்.... " இவன் "சரி பரவாயில்ல.... நீ படி.... நான் weekend ல கூப்பிடுறேன்...." என்று கூறுவதற்கு முன்னாலே அவள் தொடர்ந்தாள் "அது மட்டும் இல்ல.... வீட்டல நான் உங்க கிட்ட பேசுனது தெரிஞ்சா பிடிக்காது.... அதுனால...." "அதுனால...." "நீங்க இனிமே என்ன கூப்பிட வேண்டாம்...." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். அவள் சொல்லாலும் செயலாலும் அவர்கள் உறவையே வெட்டி விட்டது போல் அவன் உணர்ந்தான்.... இது அவனுக்கு பேரதிர்ச்சியை தந்தது, அந்த அதிர்ச்சி அவனை தூக்கத்தில் இருந்தே எழுப்பி விட்டது.
கண்ணை நன்றாக கசக்கிவிட்டு பார்த்தால் அவன் கட்டிலில் படுத்திருந்தான். தலைக்கு மேல் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தபோதும் அவன் நெற்றியில் வேர்த்திருந்தது. அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். அவள் கைபேசி எண் அவனிடம் இல்லை. இப்பொழுது அவன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தின் மயக்கத்தில் இருந்தும், கனவின் அதிர்ச்சியிலும் இருந்து விழித்திருந்தான். யாரிடமிருந்து, எப்படி அவள் எண் கிடைக்கும் என்று யோசித்தபடியே தூங்கியவன் கண்ட கனவு தான் அது என்று அவன் புரிந்து கொண்டான்.
அந்த கனவின் அர்த்தம் என்னவென்று அவன் ஆராயவில்லை. ஆனால் அவன் தூங்குவதற்கு முன் எடுத்த முடிவை அப்பொழுது உறுதி செய்துகொண்டான்.... "சந்தியாவை ஒருநாளும் தொடர்புகொள்ள நான் முயற்சி செய்ய மாட்டேன்....". கனவில் அவள் தந்த அதிர்ச்சி உண்மையில் கிடைத்தால், அது அவன் தாங்கிக்கொள்வதை காட்டிலும் மேலாக இருக்கும் என்று அவன் உணர்ந்திருந்தான்.... அது தான் உண்மையும்...!!!
10 comments:
story narration awesome da.... kalakita... enakku ennamo unmaiyaa unakku nadantha madhiri irukku seri enakku idhu onnum seriyaaa padalai
வாழ்த்துக்கு நன்றி JS....
ஆனால் இது என் கற்பனை கதை தான்.... சில உண்மைகள் இருந்தாலும் பெரும்பங்கும் கற்பனையே....
அப்படியே உண்மையாய் இருந்தால் அதில் என்ன தவறு உள்ளது, அப்படி இந்த கதையில் உனக்கு சரியாக படாதது தான் என்ன.... உன் பதிலை எதிர்பார்க்கின்றேன்....
சரவணனுக்கு வந்த அதே Doubt தான் எனக்கும் வந்தது :)))))))))... நீங்க அவ்வளவு invlovment ல எழுதிருக்கீங்க ....
Story was excellent..
indha word verification a disable pannidungalen..
மிக்க நன்றி.... சரவணனுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.... ;) .... :P ....
அதில் உள்ள பாத்திரப்படைப்பு உண்மை.... ஆனால் சம்பவங்களில் கற்பனை புகுத்தி உள்ளேன்.... :D
Word Verification disabled... :)
sariyaa padalai nu sonandhu podhuvaa thaan,.... realistic irukura madhiri oru feel irundhuchu adhaan... enna panradhu boss.. arasiyal la idhellam saadharanam..... seri unga kitta irundhu innum neraya ethir paakurom.... come on come on
sariyaa padalai nu sonandhu podhuvaa thaan,.... realistic irukura madhiri oru feel irundhuchu adhaan... enna panradhu boss.. arasiyal la idhellam saadharanam..... seri unga kitta irundhu innum neraya ethir paakurom.... come on come on
Realistic ஆ இருக்குன்னு எல்லாரும் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு....
இந்த நிலவாரத்தை எனது அடுத்த பதிவுகளிலும் நிலைப்படுத்த முயற்சிக்கின்றேன்.... வாழ்த்துக்கு மிக்க நன்றி.... உனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை.... இருந்தாலும் என்னால் ஆனவரை முயற்சிக்கிறேன்....
Vignesh ungalaiyum oru game la tag pannirukken ... inga poi paarunga
http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html
Post a Comment