நட்பு உண்மையானதென்றால்,
காதல் தெய்வீகமானது...
வற்றாத கேணி தான் நட்பென்றால்,
நாளை பெய்ய போகும் மழை காதல்...
நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்,
காதலில் புரிதலும், விட்டு கொடுத்தலும் உண்டு...
தோல்விக்கு அப்பாற்பட்டது நட்பென்றால்,
தோல்வியிலும் வெற்றி காண்பது காதல்...
நான் அவளிடம் கொண்டது இதில் எது - நட்பா...? காதலா...??
இல்லை, எங்கள் உறவு இந்த இரண்டு;
மூன்றெழுத்து வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டதா...???
ஆம்...!!!
இது காதல் இல்லாத நட்பு...;
காமம் இல்லாத காதல்...;
இந்த புனிதமான சங்கமத்தில் பிறந்த அமரமான உறவு;
பேர் சொல்ல முடியாத ஒரு தூய உணர்வு...!!!
5 comments:
machan g8 da superb...
andha pudhu uravirkku peyar thanthu vittal palaradhu yugangalukku appaarpattu...
andha uravum needikkum
நன்றி... மிக்க நன்றி நண்பா...
நீ என் கவிதைக்கு நல்ல ஒரு 'tagline' தந்துள்ளாய்....உண்மையில் அப்படி ஒரு உறவு உண்டென்றால், அது யுகங்களுக்கும் அப்பாற்பட்டது தான்...
கவிதையை ரசித்ததற்கு மீண்டும் என் நன்றிகள்....
சீக்கிரமே பேர் வைக்கனுமே :)
நன்றி ரமணா....
நீங்களே ஒரு நல்ல பேரை வைத்து விடுங்களேன்....அந்த பெருமை உங்களுக்கே சேரட்டுமே.... ;)
யோசிக்கறேன் யோசிக்கறேன் :)
Post a Comment