Saturday, February 14, 2009

காதலர் தினம்...

காதல் வாழ; காதலர்கள் வாழ,
தேவையில்லை ஓர் காதலர் தினம்...
காதலில்லாத கல் நெஞ்சங்களுக்கும்,
தேவையில்லை இந்த காதலர் தினம்...

நான் என் அன்பை சொல்ல,
தேவையில்லை எனக்கு ஓர் தனி நாள்...
ஆனால், நீ உன் காதலை சொல்ல,
தேடுகிறாயா ஓர் சிறப்பு நாள்...

நீ காத்திருந்த நாள் தான் இன்றோ..?
ஆம்...இன்று தானே உலகுக்கு காதலர் தினம்...
ஆனால்...நீ காதல் சொல்லும் நாள் என்றோ;
அன்று தான் எனக்கு காதலர் தினம்!!!

Monday, January 19, 2009

நிழலும் நிஜமும்...தொடர்கிறது...


நிழலும் நிஜமும் கதையை படிச்சுட்டு இதை படிங்க...அப்பத்தான் முழுசா புரியும்... :)

தனது Audi SUV-இல் Airport-க்குள் நுழைந்தார் விக்ராந்த். அவரது Car-ஐ பின்தொடர்ந்தே ஒரு Innova-வும் வந்துகொண்டிருந்தது. அங்கு என்றுமே இல்லாத அளவுக்கு Police இருப்பதை கவனித்தார். "VIP யாரவது வர்றாங்களா, இல்ல நமக்கு தான் இவ்வளவு Protection Arrange பண்ணி இருக்காங்களா...." என்று யோசித்துக்கொண்டே Parking-ஐ நோக்கி சென்றார் விக்ராந்த்.

அப்போது ஒரு Police Inspector அவர் Car-ஐ மரித்தார், இன்னொருவர் Driver Seat ஜன்னலை தட்டினார். விக்ராந்த் ஜன்னலை திறந்ததும் Inspector "Sir...ஒரு சின்ன Enquiry....எங்க கிட்ட Warrant இருக்கு...ஆனா உங்கள இங்க வச்சு Arrest பண்ணா Public Reaction Violent-ஆ இருக்கும்-நு நேனைக்குறோம்....So நீங்க தயவு செய்து Co-operate பண்ணி எங்க கூட Station வரைக்கும் வந்தா நல்லா இருக்கும்...." என்று சொன்னார்.

Tension ஆனார் விக்ராந்த், AC Car-இலும் அவருக்கு வியர்த்தது, "யாருய்யா உனக்கு Warrant கொடுத்தது...Home Minister கிட்ட பேசுறியா....யாருகிட்ட பேசுறன்னு தெரியாம....Warrant-ஆம் Warrant....என்ன விளையாடுறியா...." என்று பொரிந்து தள்ளினார். அதற்க்கு பொறுமையுடன் பதில் சொன்னார் Inspector, "Centre-ல இருந்து Order Sir....Anti-Terrorist Squad, CBI-நு எல்லா Department-ல இருந்தும் தனி தனி Warrants இருக்கு....So Please Co-operate, else, we will have to take you forcefully....".

பின்னால் வந்த Innova-வை Police ஏற்க்கனவே சூழ்ந்துவிட்டதை தனது rear-view mirror-இல் பார்த்தார், இனி எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று உணர்ந்த விக்ராந்தும் பணிந்தார். "சரி Sir....நீங்க முன்னாலே போங்க...I will Follow you...." என்றார். "No Sir...நாங்களும் உங்களோட வருவோம்...We will Drive the car...." "ஹ்ம்ம்...Ok...your wish..." என்று ஒதுங்கினார் விக்ராந்த். சுற்றிலும் Police வண்டிகள் சூழ Heavy Protection-உடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் விக்ராந்த்.

அங்கு அரங்கேறிய அந்த காட்சிகளை அனைவரும் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடப்பது உண்மை தானா இல்லை Shooting Rehearsal-ஆ என்று எண்ணி வியந்தார்கள். சிலர் எங்காவது Camera ஓடுகிறதா என்றும் பார்த்தார்கள். ஆனால் கூட்டத்தில் ஒருவருக்கு மட்டும் அந்த காட்சிகளை பார்த்து பெரிய ஆச்சரியம் ஒன்றும் தோணவில்லை. காரணம் காவல்துறைக்கு இந்த தகவலை தெரிவித்ததே அவர் தான்.

மதியம் தொலைகாட்சி செய்திகளில் நிறைந்திருந்தார் "தேசப்பற்று நாயகன்".

"தேசப்பற்று நாயகன் நடிகர் விக்ராந்த் கைது"

விமான நிலையத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகபடப்படும் இரண்டு நபர்களுடன் நடிகர் விக்ராந்த் கைது...பாய் என்று அழைக்கப்படும் பன்னாட்டு தீவிரவாதி அஸ்லம் கானுடன் இவருக்கு தொடர்புள்ளதாய் தகவல்கள் வெளிவந்துள்ளன...அவர் வீட்டில் இருந்து 10 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாய் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...இந்த விஷயத்தை பற்றி Police வட்டாரங்கள் மௌனம் சாதிக்கின்றன...விக்ராந்த் கைது செய்யப்பட விவரம் அறிந்து ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்... சென்னையில் Commissioner Office முன்னிலையிலும், DGP Office முன்னிலையிலும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்...விவரம் அறிந்து தமிழ் திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது...இதை பற்றி பேசுகையில், நடிகர் சங்க தலைவர், தான் உடனே விக்ராந்தை சந்தித்து பேசி, அவர் நிரபராதி ஆயிருக்கும் பட்சத்தில், அவருக்கு திரை உலகின் முழு ஆதரவும் தெரிவிக்கப்படும் என்றார்...."

இதேநேரம் தமிழ்நாடு DGP ஒரு Press Conference அழைத்தார். அதில் அவர் கூறியது, "நேத்து Night ஏழு மணி பக்கத்துல எங்களுக்கு ஒரு Call வந்தது, அதுல, இந்த மாதிரி நடிகர் விக்ராந்த் தீவிரவாதி பாய் கூட Airport-ல Terror Attack பண்ணறது பற்றி பேசினார், அதுக்கு என் கிட்ட Evidence இருக்கு-நு சொன்னார். அத உடனே அவர் எங்ககிட்ட Present-உம் பண்ணார். நாங்களும் உடனே விக்ராந்த் Sir-க்கு Call பண்ணி, மறுநாள் Airport-ல Security-க்கு தேவை-ங்கற பேருல சில Details Collect பண்ணோம்...அதுல பல விஷயங்கள் Match ஆச்சு...அதுல ஒண்ணு தான் Makeup man-ங்கற பேருல வந்த ரெண்டு தீவிரவாதிகள்..."

சாயங்காலம் மணி ஐந்தை தாண்டியிருக்கும், ரகுராம் தன் வீட்டில் விக்ராந்தின் ரசிகனான தன் பதினைந்து வயது மகனுடன் Chess ஆடிக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் Chess ஆடிக்கொண்டிருந்தாலும் அவர் கண் தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்திகளில் தான் அதிகம் கவனம் செலுத்தியது. செய்திகளில் இப்பொழுதும் விக்ராந்த் நிறைந்திருந்தார். தந்தையின் கவனம் Chess-இல் உள்ளதை விட தொலைகாட்சியில் உள்ளதை பார்த்த மகன் ஆட்டத்தில் ஏமாற்றிவிட்டான்.

"Check...!!!" என்றான். "ஹ்ம்ம் என்ன..." என்றதற்கு "Check-ப்பா..." என்றான். கொஞ்சம் Board-ஐ கவனித்துப்பார்த்தவுடன் மகன் ஏமாற்றியதை ரகு புரிந்துகொண்டார்.

மகன் விளையாட்டில் ஏமாற்றியதை பார்த்த ரகுவுக்கு முந்தய நாள் சாயங்காலம் நடந்த அந்த சம்பவம் கண் முன் ஒரு மின்னல் போல் மின்னி சென்றது. அந்த சம்பவம் என்னவென்றால்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணி ஆறரையை தாண்டியிருக்கும், ரகு தன் கைபேசியில் இருந்து விக்ராந்தின் கைபேசிக்கு அழைத்தார். Ring போகாமல் நேரடியாக Line Connect ஆனது.

"Hello..." என்று சொல்வதற்கு முன் அவருக்கு தொண்டை அடைத்தது...சொற்கள் அவர் வாயில் இருந்து வெளி வரவில்லை, காரணம் விக்ராந் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு ஒரு Cross-talk ஆக அவருக்கு கேட்டது என்பதை விட அவர்கள் பேசிய விஷயம் தான் அவருக்கு நாவரள செய்தது.

"...ரெண்டு பேர அனுப்பி வைங்க...நம்ம Airport Operation-க்கு Detailed-ஆ Plan பண்ண Airport-அ நல்ல படிக்கணும்-நு சொன்னீங்கல்ல..." என்று பேசிய விக்ராந்தின் குரல் அவருக்கு தலை சுற்றலை தந்தது. ஆனால் அடுத்த நொடி சுதாரித்தவர், அந்த உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது கைபேசியில் அந்த பேச்சை பதிவு (Record) செய்ய ஆரம்பித்தார். அவர் பதிவு செய்த உரையாடல் இப்படி தொடர்ந்தது.

"...பசங்கள அனுப்பினீங்கண்ணா, Personal Makeup man, Hair Designer-நு ஏதாவது சொல்லி என்கூடையே வச்சிக்குறேன்....அந்த லூசுப்பய Director, Airport full-ஆ Shoot பண்ண Permission வாங்கியிருக்கான்....நம்ம வேல simple-ஆ முடிச்சுரலாம்....Easy-யா ஒரு Detailed Map-ஏ போட்டுறலாம்...."

"அப்படியா !! வாஹ் வாஹ் !!! நல்ல சேதி தம்பி...கடவுள் அருள்-ல எல்லாம் நல்லபடியா நடக்கும்...நான் ரெண்டு பேர நாளைக்கு உன் வீட்டுக்கு அனுப்பி வைக்குறேன்..." என்று அமைதியான ஒரு உற்சாகத்துடன் அந்த நபர் பேசினார்.

"ஆங்...அப்புறம் பாய்...அந்த Pakistan பசங்கள அனுப்பீராதீங்க...தமிழ் பேச தெரிஞ்சவங்களா, நம்ம ஊரு பசங்கள மாதிரி உள்ள ரெண்டு பேர பாத்து அனுப்புங்க...அப்படியே அவங்க கிட்ட ஆளுக்கு ரெண்டு "பெரிய" Suitcase-உம் கொடுத்து அனுப்பி வச்சிருங்க பாய்..."

"ஹா...ஹா...ஹா...எனக்கு தெரியும் தம்பி...நீ கவலைப்படாத...நம்ம பசங்க தான் வருவாங்க...அப்புறம் பணம்...நாளைக்கு ரெண்டு பெரிய பெட்டி வரும்...வேல முடிஞ்சா இன்னும் ரெண்டு வரும்...என்ன சந்தோஷமா..."

"Thanks பாய்...சலாம் பாய்..."

"சலாம் சலாம்..." என்று சொல்லி அந்த உரையாடல் முடிந்தது.

மூச்சு கூட விடாமல் அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரகுவுக்கு வியர்த்துக்கொட்டியது. விக்ராந்த் இப்படி ஒரு துரோகியா என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பெரிய ஆபத்தை தன்னால் தவிர்க்க முடியும் என்று உணர்ந்து உடனே 100-க்கு அழைத்து, ஒரு மிக முக்கியமான, ரகசியமான தகவல் உண்டு என்றும், தான் இன்னார் என்றும், தான் DGP உடன் உடனே பேசியாகவேண்டும் என்று கூறினார். DGP-இடம் அனைத்து விவரங்களையும் கூறிய அவர், அந்த உரையாடலின் Recording-ஐயும் அவருக்கு கொடுத்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னப்பா யோசிக்குறீங்க...?? விக்ராந்த் Arrest ஆனதுனால நம்ம முதல் படத்துக்கே Check வச்சுட்டாங்க...இப்ப நம்ம மகனும் நமக்கு Check வச்சுட்டானே-நு பாக்குறீங்களா...விடுங்கப்பா அவரு நல்லவரு...கண்டிப்பா திரும்பி வருவாரு...நீங்க கண்டிப்பா அந்த படத்த Direct பண்ணி முடிப்பீங்க...வேண்ணா நீங்களே பாருங்க..."

விக்ராந்திடம் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு அணிந்து வர வேண்டிய உடைகளை பற்றி கூற கூப்பிட்ட தனக்கு Cross-talk மூலம் விக்ராந்தின் தேசத்ரோகம் என்ற அதிர்ச்சி கிடைத்தது, இன்று மகனின் ஏமாற்று-ஆட்டம் அவருக்கு மேலும் வேதனையை தந்தது. இருப்பினும் அவர் நேற்றை போலவே இன்றும் பொறுமை காத்தார்.

"அப்பா...Check...!!!", நிகழ்காலத்துக்கு திரும்பினார் ரகு.

ஏமாற்றி வெள்ளை ராஜாவுக்கு Check வைக்க முயன்ற மகன் தனது ராஜாவை பற்றி யோசிக்கவில்லை என்பதை ரகு கவனித்தார். அடுத்த Move-இல் "Check-mate...!!!" என்றார். தோல்வியை ஒப்புக்கொண்ட மகனுக்குள் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்ததை புரிந்துகொண்ட ரகு "தம்பி...தப்பு பண்ணுறது சகஜம்...பரவாயில்ல...ஆனா அதையே Repeat பண்ணக்கூடாது...அதை மட்டும் மனசுல வச்சுக்கோ..." "...அப்புறம்... எண்ணைக்குமே தப்பான வழியில ஜெயிச்சுரலாம்-நு நெனைக்க கூடாது...அது ரொம்ப தற்காலிகமானது...நீ இப்ப எனக்கு Check வச்ச மாதிரி...எண்ணைக்குமே முடிவுல உண்மை தான் ஜெயிக்கும்..."

தான் தன் Hero விக்ராந்திடம் சொல்ல நினைத்து முடியாமல் போனதை தன் மகனுக்கு சொல்லி அவனுக்கு நல்வழி காட்டியதில் ஆனந்தம் கலந்த ஒரு திருப்தி கண்டார்...!!!

Saturday, December 13, 2008

நிழலும் நிஜமும்...

சாயங்கால நேரம், வெட்டவெளி மைதானம், Commando படையின் தலைவனான மேஜர் விக்ரமன் தன்னந்தனியாக தீவிரவாதிகளுடன் ஒரு Encounter நடத்திக்கொண்டிருந்தார். தீவிரவாதிகளின் AK-47 இல் இருந்து பறக்கும் தோட்டாக்களில் இருந்து தப்பித்து, தனது துப்பாக்கியால் தீவிரவாதிகளை பதம் பார்த்துக்கொண்டிருந்தார். நாற்பது வயதை தாண்டி, சற்றே தொப்பையுடன் இருந்த அவர், தாக்க வந்த தீவிரவாதிகளுடன் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவரது வீரம், தைரியம், சாமர்த்தியம் எல்லாமே அங்கு நடந்த அந்த காட்சியில் தெரிந்தது. அவர் பறந்து பறந்து எதிரிகளை தாக்கியதை பார்த்தால் யாருமே மூக்கில் விரல் வைத்து விடுவார்கள்.

இருபது நிமிட போராட்டத்தின் முடிவில் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் உடல் மைதானத்தின் பல இடங்களிலாக சலனமற்று கிடந்தது. நம் மேஜரின் கருப்பு சட்டை கொஞ்சம் அழுக்கு ஆகி இருந்தது, பெரிய காயங்கள் ஒன்றும் அவர் உடம்பில் தெரியவில்லை. சுற்றும் பார்த்த அவர் முகத்தில் ஒரு புயலுக்கு பின் இருக்கும் அமைதி தெரிந்தது. ஒரு Military Officer-க்கே ஆன கம்பீரத்துடன் அவர் பேச ஆரம்பித்தார். நாடு, வீடு, தீவிரவாதம், சமாதானம், யுத்தம், மதம், அரசியல் இப்படி அனைத்தையும் Cover செய்து ஒரு முழு நீள Cinema Style Lecture-ஐ கொடுத்து முடித்தார். மெல்ல Crane உயர, Camera அந்த மைதானத்தையும் அதற்க்கு நடுவில் நின்று பேசி முடித்து நடக்க ஆரம்பித்த மேஜர்-ஐயும் Top View-வில் படம் எடுத்து.

"Cut It..." "Super Shot Sir....அசத்திட்டிங்க....Chance-ஏ இல்ல...!!!!" இயக்குனர் தனது Mic மூலம் ஹீரோவை பாராட்டினார். புன்சிரிப்புடன் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தார் 'தேசப்பற்று நாயகன்' விக்ராந்த். "என்ன சார் பெரிய பிரமாதம்....பிடிச்ச விஷயத்தையே Camera முன்னாடியும் செய்ய, கொடுத்து வச்சிருக்கணும்....தேசபக்தி-ங்கறது என் ரத்தத்துல ஊறியது சார்....அதையே தான் நான் திரையில சொல்லறேன்..." "இல்ல சார்....நீங்க எவ்வளவு பிரமாதமா இந்த மாதிரி characters பண்ணுறீங்க தெரியுமா....உண்மையான Military Commandos கூட உங்களோட Body Language-அ பாத்து படிக்கணும்...." "சார்....நீங்க என்ன ரொம்பவே புகழ்ரீங்க-ன்னு நெனைக்குறேன்..." பேசிக்கொண்டே தனது Secretary பற்ற வைத்து கொடுத்த Davidoff Cigarette-ஐ புகைக்க ஆரம்பித்தார். "சார் நீங்க அடுத்த Scene-க்கு Ready ஆயிட்டு இருங்க, நான் போயி அந்த Associatte கிட்ட அடுத்த Scene-க்கு Arrangements பண்ண சொல்லிட்டு வரேன்...." என்று சொல்லிவிட்டு Director விலகி சென்றார்.

Director விலகியதும் தனது Cellphone-இல் யாருக்கோ Call செய்தார் விக்ராந்த், மரியாதையுடன் எழுந்து நின்று குரலை சற்று தாழ்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார், கையால் Sceretary-ஐ போ என்று ஜாடை காட்டினார்.

"வணக்கம் பாய்...."
"நம்ம படம் Shooting Spot-ல இருந்து தான் பாய் பேசுறேன்...."
"நல்லா போயிட்டு இருக்கு பாய்....எல்லாம் உங்க தயவு....பேருக்கு நான் Produce பண்ணறேன்....எல்லாம் உங்க பணம் தான பாய்...."
"ஆமா பாய்...இதுலயும் Military Officer Role தான்....இப்ப தான் பத்து பன்னெண்டு பேர சுட்டு போட்டேன்....", லேசாக சிரித்தார்.
"சரி பாய்....நம்ம பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க....Problem ஒண்ணும் இல்லல்ல..."
"Hello...Hello...விக்ராந்த் Sir-ங்களா....Sir நான் உங்களோட Fan Sir....என் பேரு..." என்று யாரோ இடையே பேச Tension ஆனார் விக்ராந்த்.
"Shit Cross talk-நு நெனைக்குறேன்....நாய்களுக்கு எப்படித்தான் Number கெடைக்குதோ தெரியல....அதோட இந்த Cross talk வேற...அந்த Phone Company-காரன முதல்-ல சுடனும்...."
"சரி பாய்....நான் Shooting முடிஞ்சப்பறம் பேசுறேன்....சலாம் பாய்...."

இதேநேரம் Associate-இடம் பேசிக்கொண்டிருந்த Director விக்ராந்தை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்,

"எவ்வளவு நல்ல மனுஷன்யா....இந்த வயசுலயும் என்ன Dedication....Dialogue-ல எல்லாம் என்ன ஒரு fire....இவர பத்தியும் தப்பா பேசுறாங்க யா....எப்படித்தான் அப்படி பேச தோணுதோ....தங்கமான மனுஷன் யா....நாட்டுக்காகையும் எவ்வளவு பண்ணறார்....Kargil யுத்தம், Tsunami-நு என்ன விஷயம் வந்தாலும் சும்மா அள்ளி கொடுக்குறார் யா...."

நேரம் ஆறு மணியை தாண்டியிருக்கும் "Packup" சொன்னார் Director. தனது Audi SUV-இல் புறப்பட தயாராயிருந்த விக்ராந்திடம் சென்றார் Director.

"சார் அந்த Airport Fight Scene நாளைக்கே எடுத்துரலாம்....நான் நம்ம Minister-அ பிடிச்சு அதுக்கு Permission வாங்கிட்டேன்....நாதாரி, இந்த தடவ ரொம்ப அலையை விட்டுட்டான்....காசும் கொஞ்சம் அதிகமாவே வாங்கிட்டான்...." என்று சொன்ன Director-க்கு ஆறுதல் சொன்னார் விக்ராந்த், "ஹ்ம்ம்....என்ன பண்ண சார், எல்லாம் plan பண்ண மாதிரியே நடக்கணும்-ணா அப்படி இப்படி கொஞ்சம் செலவு ஆவ தான் செய்யும்...ஒண்ணும் இல்லன்னாலும் நம்ம படத்தோட Highlight-ல அந்த Airport sequence....பரவாயில்ல விட்டுருங்க...". "ஆமா சார் அதுவும் Correct தான்....கொஞ்சம் செலவானா என்ன...நம்ம Airport-ஓட எந்த முக்குலையும் Shoot பண்ண Permission கெடச்சிருச்சு....சும்மா அசத்தீரலாம்ல....இதுவர எவனும் காட்டாத மாதிரி, எவனுமே இனிமேலும் காட்ட முடியாத மாதிரி ஒரு Chase and Fight Sequence வச்சிரலாம்...." "ஆமா...ஆமா....கண்டிப்பா...." என்று சொல்லிக்கொண்டே வண்டியை கிளப்பி பறந்தார் விக்ராந்த்.

"பாருய்யா.... படம் perfect-ஆ வரணும், செலவெல்லாம் பரவாயில்லன்னு சொல்லறார் பாரு....அவரு தான்யா உண்மையான Hero...." பெருமையாக சொல்லிக்கொண்டார் Director.

இதேநேரம், ECR-இல் உள்ள தனது பண்ணைவீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்த விக்ராந்தின் Cellphone-இல் இருந்து பாய்க்கு மீண்டும் Call சென்றது.

"பாய்....நாளைக்கு நம்ம பசங்க ரெண்டு பேர அனுப்பி வைங்க...நம்ம Airport Operation-க்கு Detailed-ஆ Plan பண்ண Airport-அ நல்ல படிக்கணும்-நு சொன்னீங்கல்ல....நாளைக்கு நம்ம படம் Shooting Airport-ல தான் நடக்குது....நீங்க பசங்கள அனுப்பினீங்கண்ணா, Personal Makeup man, Hair Designer-நு ஏதாவது சொல்லி என்கூடையே வச்சிக்குறேன்....அந்த லூசுப்பய Director, Airport full-ஆ Shoot பண்ண Permission வாங்கியிருக்கான்....நம்ம வேல simple-ஆ முடிச்சுரலாம்....Easy-யா ஒரு Detailed Map-ஏ போட்டுறலாம்...."

"ஆங்....அப்புறம் பாய்....அந்த Pakistan பசங்கள அனுப்பீராதீங்க....தமிழ் பேச தெரிஞ்சவங்களா, நம்ம ஊரு பசங்கள மாதிரி உள்ள ரெண்டு பேர பாத்து அனுப்புங்க....அப்படியே அவங்க கிட்ட ஆளுக்கு ரெண்டு "பெரிய" Suitcase-உம் கொடுத்து அனுப்பி வச்சிருங்க பாய்...."

"Thanks பாய்....சலாம் பாய்...."

ஒரு விசித்திரமான புன்னகையுடன் Phone-ஐ Cut செய்த விக்ராந்த, தானே ஒரு Davidoff Cigarette-ஐ பற்றவைத்து புகைத்தார். திறந்திருந்த Car ஜன்னல் வழியாக வெளியே சென்ற புகை காற்றோடு காற்றாக கலந்தது...அவர்களுக்குள் நடந்த பேச்சை போலவே...!!!

Saturday, October 18, 2008

சொல்லாமலே....


அவன் தன் அறைக்குள் அமர்ந்து Laptop Screen-ஐ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே தன் கைக்கடிகாரத்தையும் பார்த்து மறுபடியும் பொறுமையின்றி Screen-க்கே தன் கவனத்தை திருப்பினான். மணி பத்தரை ஆக ஏன் இவ்வளவு நேரம் என்று நேரத்தையும் கடிந்துகொண்டிருந்தான். இதற்கிடையே அவன் தன் நினைவுகளையும் அசை போட்டுக்கொண்டிருந்தான்.

அவளை எப்படி சந்தித்தான், எப்படி அவர்கள் உறவு வளர்ந்தது, எல்லாவற்றையும் ஒரு மாதிரியான இன்பத்துடன் நினைத்துபார்த்துக்கொண்டிருந்தான். உண்மையை சொல்லப்போனால் அவர்கள் சந்தித்தே இல்லை. அவர்கள் இருவரும் Orkut 'Friends'. இவன் தான் ஏழேட்டு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் Orkut-இல் இவளுக்கு Scrap செய்தான். தன்னுடன் கல்லூரியில் படித்த சந்தியா என்று நினைத்து தான் முதலில் பேச ஆரம்பித்தான். ஆனால் தான் வேறு சந்தியா என்றும், ஆனந்த் என்பவரை தனக்கு தெரியாது என்றும் அவள் பதில் அளித்தாள். அது அவ்வளவு தான் என்று தான் அவன் முதலில் நினைத்தான், ஆனால் பாட்டு, இளையராஜா, SPB இப்படி இருவருக்கும் இருந்த சில Common Interests அவர்கள் நட்ப்பை வளர்க்க உதவி செய்தது.

நட்பு வளர்ந்தது, எப்போதாவது Chat செய்தவர்கள் அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள், Orkut-இல் Testimonial எழுதினார்கள். நட்பு வலுத்தது, கைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டார்கள், கணக்கில்லாமல் SMS பரிமாற்றங்கள் நடந்தன. கைபேசியிலும் Chat-லும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினார்கள். இப்படியே நட்பு முதிர்ந்து காதல் ஆனது. இது பார்க்காமலேயே, பேசி பேசி மட்டும் வந்த காதல். அதிசய காதல்...! அபூர்வ காதல்...!! இப்படி தன் காதலை நினைத்து ஆனந்த் மிகவும் பெருமைபட்டுக்கொள்வான்.

இப்படியே நினைவுகளில் ஆழ்ந்திருந்த ஆனந்த் நிகழ் காலத்துக்கு திரும்பி வந்தான். இன்று மதியம் பேசிய பொது இரவு சரியாக பத்தரை மணிக்கு வருவதாக கூறியிருந்தாளே, ஆனால் மணி இப்போது பதினொன்றை தாண்டி விட்டது இன்னும் அவள் Online வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்த போதே அவள் வந்து விட்டாள். "Sorry Dear... Konjam Late aayittu... Im callin u..." என்று type செய்துவிட்டு அவனை Chat Messenger-இல் Call செய்தாள். என்னென்ன செய்தார்கள், எங்கெல்லாம் போனார்கள் என்ற பேச்சுக்களுடன் சில கொஞ்சல்கள், சின்ன சின்ன கோபங்கள் என்று நேரம் கடந்தது.

நேரம் பன்னிரெண்டை தாண்டியிருக்கும், ஆனந்துக்கு Chat வழியாக சில வெடி சத்தங்கள் கேட்டது. என்னவென்று கேட்டதற்கு சந்தியா "Boys Hostel-ல யாருக்கோ Birthday-ன்னு நெனைக்குறேன்... அது தான் பட்டாசு போட்டு கொண்டாடுறாங்க..." "சரி ஒரு நிமிஷம், நானும் போயி என்னன்னு பாத்துட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்தாள், "Im Back..." என்ற message-ஓடு. மீண்டும் பேசி ஆரம்பிக்கவில்லை, அதற்க்கு முன் "Happy Birthday Happy______...ஹா ஹா ஹா... ஹீ ஹீ ஹீ..." "ஹ்ம்ம்... ஹ்ம்ம்... நடத்து நடத்து..." என்றெல்லாம் சில கூச்சல்களும் சிரிப்பொலிகளும் சந்தியாவின் அறையில் அரங்கேறியது ஆனந்துக்கு கேட்டது. அவர்கள் பேசியது அவனுக்கு சரியாக கேட்கவில்லை, ஆனால் அவர்கள் சந்தியாவை கிண்டல் செய்கிறார்கள் என்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது.

"என்ன ஆச்சு... உன்ன கிண்டல் பண்றாங்க போல... என்ன விஷயம்...?" என்று கேட்டான். என்றும் எதற்கும் நேரடியாக பதில் சொல்லி வந்தவள் "இல்ல... ஒண்ணும் இல்ல... சும்மா தான்..." என்று சமாளிக்க பார்த்தாள், கொஞ்சம் வெட்கத்துடன். உடனே தன்னையும் சந்தியாவையும் சேர்த்து தான் கிண்டல் செய்தார்கள் போலும் என்று எண்ணியவன் அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டான், அவளும் கொஞ்ச நேரம் சமாளிக்க முயன்றாள், இனிமேல் முடியாது என்று புரிந்தவள் "சரி... சரி... சொல்லறேன்..." என்றாள். "ஹை... இன்று வரை நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்குள் ஒருவரே வைத்துக்கொண்டிருந்தோம்... இன்று அவள் இதை பற்றி சொன்ன உடனே... ஆமா உண்மை தானே என்று கூறி propose செய்வதை simple அக முடித்து விடலாம்..." என்று எண்ணினான்.

"நான் ரொம்ப நாளா சொல்லணும்-ணு தான் நெனச்சுட்டு இருக்கேன்... ஆனா என்னமோ ஒரு சின்ன தயக்கம்..." என்று அவள் ஆரம்பிக்க ஆனந்துக்கு மனசெல்லாம் ஒரே சந்தோஷம். "இண்ணைக்கு Boys Hostel-ல ஒருத்தனுக்கு Birthday-ணு சொன்னேன்-ல..." என்று அவள் கூறியதும், அவனுக்கு தூக்கி வாரி போட்டது, "என்னடா நடக்குது" என்று குழம்பினான். அவள் தொடர்ந்தாள் "... அவன்.. கௌதம்... என்னோட... ஹ்ம்ம்... என்னோட Boy-Friend..." என்று அவள் சொல்லி முடிக்க, அவனுக்கு தான் இருந்த நாற்காலி உடைந்து, அவன் தரையில் விழுந்து, அப்படியே பூமியை பிளந்து ஒரு படுகுழியில் விழுவதுபோல் உணர்ந்தான். இப்போது நடந்து முடிந்தது ஒரு கனவாக இருக்க கூடாதா என்று அவன் எண்ணினான். "அவன் இன்னக்கே எனக்கு Treat குடுத்துட்டான்... அதான் நான் இன்னக்கு வர கொஞ்சம் Late ஆச்சு..." என்று ஆரம்பித்து அவள் என்னென்னமோ சொல்லிக்கொண்டே போனாள். அவன் அதை கவனித்ததாக தெரியவில்லை.

அவனுக்கு அழுகை அழுகையாய் வந்தது. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. தான் கட்டியதெல்லாம் வெறும் மனக்கோட்டை தானா ? அவளுக்கு உண்மையிலேயே என் மேல் காதல் இல்லையா ?? நான் தான் நடப்பை காதல் என்று எண்ணிய மூடனா ??? ஒரு வேளை அவள் சும்மா விளையாடுகிராளோ ???? இப்படி கேள்விகள் எழ அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும்போல் இருந்தது, ஆனால் "Hello... Hello... இருக்கியா டா...?" என்ற அவள் குரல் அவனை மீண்டும் சுயநினைவுக்கு திருப்பியது. அவனும் பதில் சொன்னான், எதையோ இழந்தவன் போல் "ஹ்ம்ம்... இருக்கேன்" "... ஆமா... எத்தன நாளா...?" என்று அவன் தொடர "என்ன... ஒஹ்... அதுவா... அதான் ரெண்டு வர்ஷமா-ன்னு சொன்னேன்-ல... ஏன்... என்ன ஆச்சு...?" என்றாள். "இல்ல... கவனிக்கல... ஒண்ணும் இல்ல... சும்மா தெரிஞ்சிக்கலாம்-ணு தான் கேட்டேன்..." என்று சமாளித்தான்.

தன் காதல் சொல்வதற்கு முன்பே முடிந்து போன வேதனை... அது அதிசய காதலோ அற்புத காதலோ அல்ல, வெறும் கற்பனை காதல் தான் என்பதை உணர்ந்த ஏமாற்றம்... தன்னை பார்ப்பதற்கு முன்னாலே அவள் வேறொருவனின் காதலி என்ற உண்மை அவனுக்கு அளித்த சிறிய ஆறுதல்... ஒரு வேளை என்னை முதலில் பார்த்திருந்தால்... என்று தன்னை தானே தேற்றிக்கொள்ள உருவான எண்ணம்...

இந்த எண்ணபெருக்குகளின் நடுவில் அவள் கேள்விகளுக்கு என்னன்னெமோ பதில் சொன்னவனின் கைவிரல்கள் Laptop Keyboard-இல் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தன. அவன் 5600 Members இருந்த 'First Love' Community-இல் இருந்து Unjoin செய்து விட்டு 24000 Members உள்ள 'I Cannot Forget My First Love' Community-இல் Join செய்ய Request அனுப்பினான். அவன் Request அடுத்த கணமே ஏற்றுக்கொள்ளப்பட்டது... "... no matter how much pain it has caused, no matter how many tears have fallen, first love will never leave my soul... (... எத்தனை வலி தந்திருந்தாலும், எவ்வளவு கண்ணீர் சிந்தியிருந்தாலும், முதல் காதல் என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காது...)" என்று அந்த Community அவனை வரவேற்றது...

Tuesday, October 7, 2008

உறவா...? உணர்வா...??


நட்பு உண்மையானதென்றால்,
காதல் தெய்வீகமானது...

வற்றாத கேணி தான் நட்பென்றால்,
நாளை பெய்ய போகும் மழை காதல்...

நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்,
காதலில் புரிதலும், விட்டு கொடுத்தலும் உண்டு...

தோல்விக்கு அப்பாற்பட்டது நட்பென்றால்,
தோல்வியிலும் வெற்றி காண்பது காதல்...

நான் அவளிடம் கொண்டது இதில் எது - நட்பா...? காதலா...??

இல்லை, எங்கள் உறவு இந்த இரண்டு;
மூன்றெழுத்து வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டதா...???

ஆம்...!!!
இது காதல் இல்லாத நட்பு...;
காமம் இல்லாத காதல்...;

இந்த புனிதமான சங்கமத்தில் பிறந்த அமரமான உறவு;
பேர் சொல்ல முடியாத ஒரு தூய உணர்வு...!!!

Wednesday, September 24, 2008

காதல் பரிசு...

நம் வாழ்க்கையெனும் வானத்தில்;
காதலெனும் கார்மேகம்;
ஆனந்த மழையாய் பொழியும் என்று நினைத்தேன்....

உன் அன்பு;
இதமான தென்றலாய் வீசும் என்று எதிர்பார்த்தேன்,

ஆனால் நீயோ மௌனம் எனும் சூறாவளியை வீசி;
காதல் கார்மேகத்தையும் கலைத்து;
என் நெஞ்சில் பேரிடியெனும் பரிசையும் தந்துவிட்டாய்....

ஆனால் பெண்ணே....
என் நினைவுகளில் மின்னலொளியாய் பதிந்த உன்னை;
அழிக்க எந்த சக்தியாலும் முடியாது....!!!

Thursday, August 28, 2008

கனவுத்தோழி....

அவன் அவளிடம் பேசி ரொம்பக்காலம் ஆகி விட்டது. ஆமாம், முகம் கொடுத்து பேசி சுமார் ஐந்து வருடமாவது இருக்கும், சும்மா "வாங்க..." என்றும் "எப்பிடி இருக்க..." என்ற கேள்விக்கு "நல்லா இருக்கேன்..." என்று Formality ஆக பேசியே இரண்டு வருடம் இருக்கும். சின்ன வயதில் மிக நெருக்கமாக பழகிய தன் தோழி இப்பொழுது தன்னை பார்த்தால் சற்று புன்னகை செய்ய மூன்று முறை யோசனை செய்கிற நிலைமை, இது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று நான் இப்பொழுது சொல்லி எந்த பயனும் இல்லை, நான் அதை சொல்ல போவதும் இல்லை. தவறு அவன் பேரிலும் இல்லை அவள் பேரிலும் இல்லை என்பது மட்டும் உண்மை.


இப்படி இருந்த நிலையில் ஒரு நாள் அவனுக்குள் ஒரு எண்ணம் முளைத்தது. அப்படி திடீர் என்று முளைத்த எண்ணம் ஒன்றும் இல்லை, பல நாட்க்களாக வளர்ந்து வந்த எண்ணம் அன்று முழு வளர்ச்சி அடைந்தது என்பதே உண்மை. அது என்னவென்றால் இப்பொழுது அவளை தொலைபேசியில் (கைபேசியில்) அழைத்து பேசினால் என்ன என்பது தான். இருந்தாலும் அவனுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. இத்தனை காலம் கழித்து அழைத்துப்பேசினால், அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள்.... தன் பெற்றோரிடம் 'போட்டு கொடுத்து' விடுவாளோ.... அப்படி செய்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்.... அவனது ego வும் அவனை தடுத்து. "இத்தனை காலமாக உன்னை மதியாத அவளை நீ ஏன் அழைத்து பேசணும்.... அது உன் ஆண்மைக்கு இழுக்கு அல்லவா....????" என்று அது கேவலமாக கேள்வி கேட்டது.


அன்று ஞாயற்றுக்கிழமை. அப்படி அவளை அழைக்க வேண்டும் என்றாலும், அவள் கைபேசி எண் தெரியாது. அதை எப்படி தெரிந்து கொள்ள.... யாரிடம் கேட்டால் "மீசையில் படாமல் கூழ் குடிக்கலாம்....".... ? இப்படி ஆயிரம் கேள்விகளுக்குள் மாட்டிக்கொண்டு அவளிடம் பேசவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான். இப்படி யோசித்துக்கொண்டே அவன் அவன் படுக்கையில் அமர்ந்தான்.


ஒரு முடிவெடுத்தால், அதை மீறுவதென்பது நமக்கு தான் ஹல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே.... அதேப்போல் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவள் கைபேசி எண்ணை கண்டு பிடித்தே விட்டான்.


எண் கிடைத்துவிட்டாலும் எப்படி பேச, என்ன பேச.... இப்படியெல்லாம் பல தயக்கங்களால் உடனே அவளிடம் உடனே பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தயக்கங்களை தள்ளி வைத்து ஒரு வழியாக அன்றே அவளிடம் பேச ஆயத்தமானான். கைபேசியில் Save செய்து வைத்திருந்த அவள் எண்ணை அழுத்தினான்.... "தக் தக்...தக் தக் தக்..." இது அவன் இதயத்துடிப்பு.... அவள் ஏனோ கைபேசியை எடுக்கவேயில்லை.... சரி போகட்டும், இதோடு அவளோடு பேசுவதற்கான தன் முயற்சியை கைவிட்டுவிட முடிவெடுத்தான். இது மீறுவதற்கான முடிவல்ல, உறுதியான முடிவு.


ஆனால் அவன் சற்றுமே எதிர்பாராத ஒரு திருப்பம் சில நிமிடங்களில் ஏற்ப்பட்டது. அவனுக்கு ஒரு SMS வந்தது "Who are you ? Do I know you ?". ஆம் அது அவளிடம் இருந்தே தான். அவன் முகத்தில் மலர்ந்த அந்த ஆனந்தம் அவனுடன் இருந்த அவன் நண்பர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. "டேய் ஆனந்த்.... திடீர்ன்னு என்னடா இவ்வளவு ஆனந்தம்.... என்ன விசேஷம்.... " என்று கேட்டனர். அவன் கதை முழுவதையும் சுருக்கமாக சொன்னான், சொல்லிவிட்டு அவளுக்கு பதில் SMS அனுப்ப போவதாக சொன்னான். அவர்கள் அவன் மண்டையில் ஒரு குட்டு கொடுத்துவிட்டு, அவளை Call பண்ண சொன்னார்கள். ஆனால் அவன் அவர்கள் பேச்சை தட்டியிருக்கலாம். தட்டியிருந்தால் அவன் அந்த பேரதிர்ச்சிக்கு ஆளாயிருக்கமாட்டான்.


அவன் அவள் கைபேசிக்கு அழைத்தான், அவளும் எடுத்தாள், இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் பேசினால் "ஹலோ, நான் சந்தியா பேசுறேன், நீங்க யாரு பேசுறீங்க...". இவன் தொடர்ந்தான் "ஹ.. ஹல.. ஹலோ.. நா.. நான் தான் ஆ.. ஆனந்த் பேசுறேன்..." "ஹ்ம்ம்...சொல்லுங்க" அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவளிடமிருந்து சற்றுமே ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. அது அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு பேச்சை தொடர்ந்தான். "நல்லா இருக்கியா....பேசி எத்தன காலம் ஆயிட்டு...." "ஹ்ம்ம்.... நான் நல்லா இருக்கேன்.... நீங்க நல்லா இருக்கீங்களா...." "நான் நல்லா தான் இருக்கேன்.... நீ இப்ப எங்க இருக்க.... என்ன பண்ணற.... " "கோயம்புத்தூர் இன்ஜினியரிங் காலேஜுல படிக்குறேன்.... Second year.... " "அப்படியா.... கொயம்புத்தூர்லயா.... சரி சரி.... நல்ல படிக்குரியா.... " "ஹ்ம்ம்.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க.... " "நான் பாம்பேல இருக்கேன்...." அவன் தொடர்ந்தான் "நீ கோயம்புத்தூருல இருக்க.... எத்தன நாளுக்கு ஒருக்கா ஊருக்கு போயிட்டு வருவ...." "ஹ்ம்ம்.... மாசத்துக்கு ஒரு தடவ போவேன்.... Second Saturday வரப்ப போவேன்.... "


இப்படியே சில நிமடங்கள் கடந்தன. ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் "ஹ்ம்ம்..." என்று சொல்லுவது, ஒரு ஈடுபாடு இல்லாமல் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்து வந்தது அவனுக்கு கொஞ்சம் சங்கடமாகே இருந்தது. இவனும் பொறுத்து பார்த்தான், பொறுமை கேட்டவுடன் ஒரு கேள்வி கேட்டான்.... "நான் உங்கிட்ட பேசுறது Disturbtion ஆ இருக்கா.... இருந்துதுன்னா சொல்லு.... நான் பிறகு எப்பவாவுது கூப்பிடுறேன்...." அவன் இதற்க்கு எதிர்பார்த்த பதில் "இல்ல அப்பிடியெல்லாம் இல்ல.... நீங்க சொல்லுங்க.... " ஆனால் அவள் கூறிய பதில் "ஹ்ம்ம்.... நாளைக்கு Internals இருக்கு படிச்சிட்டு இருந்தேன்.... ரொம்ப tough subject.... ஒண்ணுமே படிக்கல.... அதான்.... " இவன் "சரி பரவாயில்ல.... நீ படி.... நான் weekend ல கூப்பிடுறேன்...." என்று கூறுவதற்கு முன்னாலே அவள் தொடர்ந்தாள் "அது மட்டும் இல்ல.... வீட்டல நான் உங்க கிட்ட பேசுனது தெரிஞ்சா பிடிக்காது.... அதுனால...." "அதுனால...." "நீங்க இனிமே என்ன கூப்பிட வேண்டாம்...." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். அவள் சொல்லாலும் செயலாலும் அவர்கள் உறவையே வெட்டி விட்டது போல் அவன் உணர்ந்தான்.... இது அவனுக்கு பேரதிர்ச்சியை தந்தது, அந்த அதிர்ச்சி அவனை தூக்கத்தில் இருந்தே எழுப்பி விட்டது.


கண்ணை நன்றாக கசக்கிவிட்டு பார்த்தால் அவன் கட்டிலில் படுத்திருந்தான். தலைக்கு மேல் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தபோதும் அவன் நெற்றியில் வேர்த்திருந்தது. அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். அவள் கைபேசி எண் அவனிடம் இல்லை. இப்பொழுது அவன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தின் மயக்கத்தில் இருந்தும், கனவின் அதிர்ச்சியிலும் இருந்து விழித்திருந்தான். யாரிடமிருந்து, எப்படி அவள் எண் கிடைக்கும் என்று யோசித்தபடியே தூங்கியவன் கண்ட கனவு தான் அது என்று அவன் புரிந்து கொண்டான்.


அந்த கனவின் அர்த்தம் என்னவென்று அவன் ஆராயவில்லை. ஆனால் அவன் தூங்குவதற்கு முன் எடுத்த முடிவை அப்பொழுது உறுதி செய்துகொண்டான்.... "சந்தியாவை ஒருநாளும் தொடர்புகொள்ள நான் முயற்சி செய்ய மாட்டேன்....". கனவில் அவள் தந்த அதிர்ச்சி உண்மையில் கிடைத்தால், அது அவன் தாங்கிக்கொள்வதை காட்டிலும் மேலாக இருக்கும் என்று அவன் உணர்ந்திருந்தான்.... அது தான் உண்மையும்...!!!